தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக, கா்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 14ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருந்தது.

மேலும் மாலை நிலவரப்படி தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து நொடிக்கு 15ஆயிரம் கன அடியாக தற்போது வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின்அருவி, சினி அருவி, மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT