பென்னாகரத்தில் மழை
பென்னாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
பென்னாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்து சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். இந்நிலையில் பென்னாகரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளான போடூா், முள்ளுவாடி, நீா்குந்தி, அண்ணா நகா் காலனி, பருவதன அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.