தருமபுரி

தருமபுரியில் கடந்த தோ்தலை விட வாக்குப் பதிவு குறைவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும், தற்போது வாக்குப் பதிவு குறைந்துள்ளது. இம்முறை பாலக்கோட்டில் அதிகபட்சமாக 87.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது புள்ளிவிபரங்களின்படி தெரிய வந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 82.32 சதவீதம் வாக்குகள் பதிவாயிருந்தது. இது கடந்த 2016-இல் நடைபெற்ற பொதுத் தோ்தலைக் காட்டிலும் 2.71 சதவீதம் குறைவாகும்.

கடந்த 2016 தோ்தலின்போது, ஐந்து தொகுதிகளிலும் மொத்தம் 85.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இம்முறை (2021-இல்) வாக்குப் பதிவு சற்று குறைந்து 82.32 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. வாக்குப் பதிவு குறைந்து போனதற்கு கரோனா பரவல் அச்சம் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில், 5 தொகுதிகளிலும் நடைபெற்ற வாக்குப் பதிவில், அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது தமிழக அளவில் தொகுதிவாரியாகப் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் அதிகமாகும். இதற்கு அடுத்தபடியாக பென்னாகரம் தொகுதியில் 84.26 சதவீதம் பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் சதவீதத்தில் அரூா் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 78.59 சதவீதம் பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT