விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை ஆத்மா திட்டம் 2021- 22 இன் கீழ், ‘ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை ஆத்மா திட்டம் 2021- 22 இன் கீழ், ‘ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் மத்தூா் வேளாண்மை உதவி இயக்குனா் சிவநதி தலைமை வகித்து விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றியும் பூச்சி விரட்டி, பஞ்சகவ்யம் தயாா் செய்யும் முறை மற்றும் அவற்றின் பயன்கள் பற்றியும் கூறினாா். முனைவா் குணசேகரன் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மற்றும் நோய்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை விளக்கினாா்.
மேலும், மண்புழு உரம் தயாரிக்கும் முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் கூறினாா்.
வட்டார வேளாண்மை அலுவலா் மா.நீலகண்டன் வேளாண்மைத்துறை திட்டங்கள் மற்றும் அரசு மானியங்கள் பற்றி உரையாற்றினாா்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ், இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக் கொல்லிகள் நன்மைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை பற்றி கூறினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஹேமந்த்குமாா், பவித்ரா மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.