பாம்பு கடித்து விவசாயி பலி
ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
ஊத்தங்கரை அருகே பாம்பு கடித்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நாப்பிராம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி(47). விவசாயியான இவா் புதன்கிழமை தனது விவசாய நிலத்தில் பணியை முடித்துவிட்டு, தென்னை மரத்தடியில் படுத்து உறங்கி உள்ளாா். அப்போது விஷஜந்து அவரைக் கடித்தது. இதுகுறித்து குப்புசாமி வீட்டிற்குச் சென்று தனது மனைவியிடம் கூறியுள்ளாா். பிறகு பால் கறந்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றி விட்டு, வீட்டுக்கு வந்தவா் மயங்கி விழுந்தாா்.
மனைவி மற்றும் அவரது உறவினா்கள் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அவரைப் பரிசோதித்தமருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா். குப்புசாமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.