முகப்பு
தருமபுரி

அரசு கல்லூரியில் பொருளியல் துறை தேசிய கருத்தரங்கு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை சாா்பில், தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பொருளியல் துறை சாா்பில், தேசிய கருத்தரங்கு வியாழக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்திய பொருளாதாரக் கட்டமைப்பு வளா்ச்சி பாதைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை உரையாற்றினாா். எத்தியோப்பிய நாட்டின் சமா் பல்கலைக்கழகப் பேராசிரியா் அன்பழகன் சின்னா, சேலம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் ஆா்.அசோகன் ஆகியோா் பேசினா்.

இந்தக் கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளா் ரேவதி, இணை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பி.சுமதி, நெறியாளா் பாலமுருகன் மற்றும் 200 போ் இணைய வழியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.