முகப்பு
தருமபுரி

நாளை மதுக்கடைகள் மூடல்

சுதந்திர தின விழாவையொட்டி, ஆக. 15-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சுதந்திர தின விழாவையொட்டி, ஆக. 15-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, 12 விதியின் படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக. 15 அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள், தனியாா் விடுதிகள் அனைத்தும் மூடப்படும். இந்த உத்தரவினை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுபானக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்கப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), ஏற்கனவே கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியாா் உணவகங்கள் அனைத்தும் அன்றைய தினத்தில் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.