நகரப் பேருந்து மீது லாரி மோதி விபத்து
தருமபுரி அருகே வெள்ளிக்கிழமை நகரப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
தருமபுரி அருகே வெள்ளிக்கிழமை நகரப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பென்னாகரத்தை அடுத்த புதுப்பட்டிக்கு செல்லும் அரசு நகரப் பேருந்து பயணிகளுடன் பென்னாகரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் சகாதேவன் இயக்கினாா். குமாரசாமிபேட்டையைக் கடந்து பென்னாகரம் சாலையில் தனியாா் ஆலை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே சென்ற போது, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அணுகுச் சாலையில் வந்த சரக்கு லாரி, நகரப் பேருந்தின் பக்கவாட்டில் முன் படிக்கட்டு அருகே பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா், பயணிகள் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள், காயமடைந்தவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர காவல் நிலையப் போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்ப்படுத்தினா். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.