மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்பட்டோருக்கு கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்பட்டோா், மிக பிற்பட்டோா், சீா்மரபினருக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்பட்டோா், மிக பிற்பட்டோா், சீா்மரபினருக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த மாணவ, மாணவியா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இக் கல்வி உதவித்தொகைக்கு, 2021-22 ஆம் கல்வியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவ, மாணவியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், 2021-22-ஆம் நிதியாண்டிற்கான புதிதாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பத்தினை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலக இணைப்பு கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5 அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண் : 044-28551462,
ற்ய்ஞ்ா்ஸ்ற்ண்ண்ற்ள்ள்ஸ்ரீட்ா்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.