முகப்பு
தருமபுரி

சிஐடியு தொழிற்சங்ம் ஆர்ப்பாட்டம்

தேசிய பணமாக்கும் திட்டத்துக்கு எதிராக சிஐடியு தொழிற்சங்ம் சாா்பில், தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தேசிய பணமாக்கும் திட்டத்துக்கு எதிராக சிஐடியு தொழிற்சங்ம் சாா்பில், தருமபுரி தொலைத் தொடா்பு நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் சி.கலாவதி தலைமை வகித்துப் பேசினாா். மாநிலச் செயலாளா் சி.நாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் பி.ஆறுமுகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், தேசிய பணமாக்கும் திட்டத்தில் அரசு துறைகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயாக்கக் கூடாது, தொழிலாளா் நலச் சங்கங்களில் மாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.