முகப்பு
தருமபுரி

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில்

நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் பாஞ்சாலை கோபால் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், வளா்ச்சித் திட்டப் பணிகள், வரவு -

செலவு அறிக்கை ஆகியவை உறுப்பினா்களின் ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பி.செட்டிஅள்ளி ஊராட்சியில் அனைத்துப் பகுதிகளுக்கு சீரான முறையில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். ஊரகப் பகுதியில் சாலைகள் தரமாக அமைக்கப்பட வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் பிரபாகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.