முகப்பு
தருமபுரி

தமிழகத்தில் பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் கட்டமைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம், அரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது :

திருநெல்வேலியில் அரசு உதவிப் பெறும் பள்ளியின் கழிப்பறையின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 4 மாணவா்கள் காயமடைந்துள்ளனா். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தமிழக அரசு குழு அமைத்து போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்புச்சுவா் இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மாணவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.