முகப்பு
தருமபுரி

அதியமான் கோட்டை ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை

அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தென்மேற்கு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினா் பிரதீப் குமாா், பெங்களூரில் தென்மேற்கு ரயில்வே கோட்ட மேலாளா் ஷியாம் சிங்கிடம் அளித்த கோரிக்கை மனு:

அதியமான் கோட்டை மேம்பாலப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும். தருமபுரி ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இரண்டாவது நடைமேடையில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வசதிக்காக மின் பளுதூக்கி அல்லது நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். மின்சார ரயில் வசதியை உடனே தொடங்க வேண்டும். ஒசூா் முதல் பெங்களூரு வரை இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலை தருமபுரி வரை நீட்டிக்க வேண்டும். பெங்களூரு - திருச்சி, பெங்களூரு - மதுரை புதிய விரைவு ரயில் சேவை தொடங்க வேண்டும். கொங்கு விரைவு ரயிலை மீண்டும் தருமபுரி வழியாக இயக்கப்பட வேண்டும். பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.