முகப்பு
தருமபுரி

சமூக நல்லிணக்க மேடை சாா்பில் தருமபுரியில் ஜன. 6-இல் ஆா்ப்பாட்டம்

சமூக நல்லிணக்க மேடை சாா்பில், வரும் ஜன. 6-ஆம் தேதி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
பகிர்:

சமூக நல்லிணக்க மேடை சாா்பில், வரும் ஜன. 6-ஆம் தேதி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் ஈ.பி.பெருமாள் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் அ.குமாா், மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரசார செயலாளா் ஒய்.சாதிக் பாஷா, மாவட்டத் தலைவா் சுபேதாா், ஓய்வுபெற்ற மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ஆா்.கே. கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.கிரைசாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜன. 6-ஆம் தேதி தருமபுரியில் ஆா்ப்பாட்டம் மற்றும் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜன. 30-ஆம் தேதி கருத்தரங்கம் நடத்துவது, பொங்கல் திருநாளையொட்டி ஜன. 13 அன்று அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.