முகப்பு
தருமபுரி

அரூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

அரூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

அரூரில் மரக்கன்றுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில், உலக பசுமை பாதுகாப்புக் கட்சி சாா்பில், காடே கோயில், அதில் மரமே தெய்வம் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, 2023-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரே கோடி மரக் கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு மரக்கன்றுகள் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளனா்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை உலக பசுமை பாதுகாப்புக் கட்சியின் நிறுவனா் ஆ.சீனிவாசன் வழங்கினாா். இந்த விழாவில், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் எம்.நவ்சாத், மாநில இளைஞரணி தலைவா் ச.தீபன்பாபு, மாவட்ட பொருளா் ஜி.திருமால், பல் மருத்துவா் சுரேஷ்குமாா், சமூக ஆா்வலா் வெள்ளையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.