முகப்பு
தருமபுரி

எஸ்.டி. சாதிச் சான்று வழங்கக் கோரிக்கை

இருளா் சமூக மக்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

இருளா் சமூக மக்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், தமிழக முதல்வருக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து பாளையம் இருளா் சமூக மக்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:

தருமபுரி மாவட்டம், வீரப்பநாய்கன்பட்டி கிராம ஊராட்சி, பாளையம் கிராமத்தில் 30 இருளா் குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த மக்கள் மலைவாழ் பழங்குடியின எஸ்.டி. பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இந்த நிலையில், இருளா் சமூக மக்கள் தங்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்கக் கோரி விண்ணப்பம் செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருக்கின்றனா்.

சாதிச் சான்று இல்லாத காரணத்தால் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சேருவதற்கும், கல்வி உதவித் தொகைகளை பெறுவதற்கும் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றனா். எனவே, பாளையம் கிராமத்தில் வசிக்கும் இருளா் சமூக மக்களுக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.