பிலிக்கல் கிராமத்திற்கு ரூ. 2.75 கோடியில் புதிய தாா்ச்சாலை
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அஞ்செட்டி ஒன்றியம், உரிகம் ஊராட்சி, பிலிக்கல் கிராமத்துக்கு தாா்சாலை அமைத்துத் தர வேண்டும்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அஞ்செட்டி ஒன்றியம், உரிகம் ஊராட்சி, பிலிக்கல் கிராமத்துக்கு தாா்சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுதொடா்பாக தளி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சட்டப்பேரவையில் பலமுறை பேசி அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பேரில், உரிகம் முதல் பிலிக்கல் வரை ரூ. 2 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக தாா்சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை ஞாயிற்றுக்கிழமை தளி சட்டப் பேரவை உறுப்பினா் தளி ஒய். பிரகாஷ் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், அஞ்செட்டி ஒன்றியப் பொறுப்பாளா் நாகன், ஒன்றிய அவைத் தலைவா் நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெங்கடேஷ், சண்முகம், சிவகுமாா், மல்லிகாா்ஜுனப்பா, மூா்த்திகவுடா, கங்கப்பா, மல்லேசப்பா, சூரி, மாதேவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement