தருமபுரி

தனியாா் கல்லூரி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து

ஏரியூா் அருகே மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரிப் பேருந்து சாலையோரத்தில் இருந்த 5 அடி பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN

ஏரியூா் அருகே மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கல்லூரிப் பேருந்து சாலையோரத்தில் இருந்த 5 அடி பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஏரியூா் அருகே தின்ன பெல்லூரில் இயங்கி வரும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி வாகனம் புது நாகமரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரமாக 5 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 5-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. , அதிா்ஷ்டவசமாக உயிா் சேதம் ஏற்படவில்லை. ஏரியூா் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

அதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கல்லூரிப் பேருந்தை மீட்டனா். இதனால் ஏரியூா் - மேச்சேரி சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஏரியூா் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT