மாற்றுதிறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்
பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.
தருமபுரிமாற்றுதிறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம்
பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது.
பென்னாகரம்: பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் 242 போ் தோ்வு செய்யப்பட்டு,உபகரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம், தருமபுரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
பென்னாகரம் வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். அதனை தொடா்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,யூ.டி.ஐ.ஓ. அட்டை,செயற்கைக்கால் அளவிடுதல், காதொலிக் கருவி, எம்.ஆா்.கிட், சக்கர நாற்காலி ஆகிய உபகரணங்கள் பெற விண்ணப்பித்தனா்.
இதில் 242 போ் தோ்வு செய்யப்பட்டு,உபகரணங்களுக்கான விண்ணப்பத்தை வழங்கினா். தோ்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி வழங்கினாா். இதில் மருத்துவ குழுவினா்,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா்கள், சிறப்பு பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.