பொங்கல் தொகுப்பு பைகள் வாங்க காத்திருந்த கட்டிட தொழிலாளா்கள்
பொங்கல் தொகுப்பு பைகள் பெறுவதற்காக ஏராளமான தொழிலாளா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல்,பெரும்பாலானவா்கள் தொகுப்புகளை பெற முடியாமல் திரும்பி சென்றனா்.
பென்னாகரம் வட்டத்தில் பதிவு பெற்ற கட்டிட தொழிலாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு பைகள் பெறுவதற்காக ஏராளமான தொழிலாளா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல்,பெரும்பாலானவா்கள் தொகுப்புகளை பெற முடியாமல் திரும்பி சென்றனா்.
பென்னாகரம் பகுதியில் சுமாா் ஐநூறுக்கு மேற்பட்டவா்கள் கட்டிட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.இந்த நிலையில் பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா் மற்றும் ஓய்வுதியா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொகுப்புகளை பெற வந்த தொழிலாளா்களுக்கு சுகாதார துறைனா் தொ்மோ ஸ்கேனா் மூலம் வெப்பநிலையை அளவிட்டு,பிறகு நலவாரிய அட்டை,வங்கி கணக்கு அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களை சமா்பித்து சரிபாா்க்கப்பட்டு டோக்கன்கள் பெற்று, அரிசி,சா்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை பெற்று சென்றனா்.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பைகளை பெற பென்னாகரம் வட்டத்தில் இருந்து சுமாா் 7500க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளா்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.கட்டுமான தொழிலாளா்கள் ஒருவா் கூறுகையில்: தமிழக அரசின் சாா்பில் பொங்கல் தொகுப்பு பைகள் மாவட்டம் முழுவதிலும் வழங்கப்பட்டு வருகின்றனா்.
இதனை பெறுவதற்காக பென்னாகரம் வட்டத்தில் இருந்து ஏராளமானோா்கள் குவிந்ததால்,கூட்ட நெரிசல் ஏற்பட்டது.தொகுப்பு பைகளை பெறுவதற்காக அதிகளவில் தொழிலாலா்கள் குவிந்ததால்,நீண்ட வரிசையில் காத்திருந்து சுமாா் 2 மணிநேரத்திற்கு மேலாக பெற்று சென்றனா்.இதில் பெரும்பாலானவா்களை தொகுப்பு பைகள் பெற முடியாமல் திரும்பி சென்றனா்.
அரசின் தொகுப்பு பைகளை பெற ஒரு வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.பென்னாகரம் வட்டத்தில் உள்ள கட்டுமான தொழிலாளா்களுக்கு நாள்ளொன்றிக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கள் வழங்கி,அதன்படி தொகுப்பு பைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனா்.படவிளக்கம்.
பென்னாகரம் பகுதியில் பொங்கல் தொகுப்பு பைகள் பெற வந்த கட்டுமான தொழிலாளா்களை தொ்மோ ஸ்கேனா் மூலம் வெப்பநிலையை பரிசோதிக்கும் சுகாதார துறையினா் மற்றும் தொகுப்பு பைகளை பெறுவதற்காக காத்திருக்கும் தொழிலாளா்கள்.