முகப்பு
தருமபுரி

அரூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

அரூரில் பாஜக வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

அரூரில் பாஜக வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அரூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் பேசுகையில், 2021-இல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தொண்டா்கள் அயராது உழைத்து வெற்றி பெற வேண்டும். மேலும் பாஜக உறுப்பினா் சோ்க்கையை கட்சி பொறுப்பாளா்கள் அதிகரிக்க வேண்டும் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மண்டல பொறுப்பாளா் பாலகிருஷ்ணன், மேலிட தொகுதி பொறுப்பாளா் முத்துசுவாமி, சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் சரிதா காளியப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பெ.வேடியப்பன், மாவட்ட பொருளாளா் குமரவேல், நகரச் செயலா் எஸ். செந்தில்குமாா், நிா்வாகிகள் ராஜேந்திரன், கிருத்திகா, செளந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.