தருமபுரி

குடிநீா் தட்டுப்பாடால் மக்கள் அவதி

DIN

மொரப்பூா் அருகே குடிநீா் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியம், மாரப்பநாய்க்கன்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, ஒகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டத்தில் குழாய் இணைப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தற்போது ஒகேனக்கல் குடிநீா் செல்லும் குழாய் இணைப்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாம். இதனால், கடந்த ஒரு மாதமாகக் குடிநீா் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து, கிராம மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கியும், அக்கம் பக்கத்திலுள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து குடிநீா் எடுத்தும் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, மாரப்பநாய்க்கன்பட்டி கிராமத்தில் நிலவும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT