முகப்பு
தருமபுரி

தேசிய சாகச விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனையா், பயிற்றுநா்கள் மற்றும் சாகசங்கள் புரிந்தோருக்கு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

அதனடிப்படையில், மத்திய அரசின் சாா்பில் 2020-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம், நீா், வான்வழி சாகசங்கள் நிகழ்த்தியவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை ட்ற்ற்ல்ள்://க்க்ஷற்ஹ்ஹள்-ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை ஜூலை 5- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.