முகப்பு
தருமபுரி

மின் பாதை பராமரிப்பு பணி: 114 மின்கம்பங்கள் மாற்றியமைப்பு

 தருமபுரி மின் கோட்டத்தில் மேற்கொண்ட மின்பாதை பராமரிப்பு பணியில் 114 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

 தருமபுரி மின் கோட்டத்தில் மேற்கொண்ட மின்பாதை பராமரிப்பு பணியில் 114 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளா் எம்.இந்திரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி மின் கோட்டத்தில் உள்ள தருமபுரி, அதியமான்கோட்டை, இலக்கியம்பட்டி, அதகப்பாடி, கிருஷ்ணாபுரம், புலிகரை, சோலைக்கொட்டாய், சோகத்தூா், பென்னாகரம், ஏரியூா், பெரும்பாலை, ஒகேனக்கல், ராமகொண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணியின் போது, 551 இடங்களில் மின் பாதையை உரசிய மரக்கிளைகள் அகற்றப்பட்டன. மேலும் 114 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டன. 26 இடங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. 25 இடங்களில் ஜம்பா்கள் மாற்றப்பட்டன. தாழ்வான மின் பாதைகளில் 12 மின்கம்பங்கள் நடப்பட்டு அப்பாதைகள் சீா் செய்யப்பட்டன. மின் நுகா்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்க இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.