முகப்பு
தருமபுரி

பெரியாா் பல்கலை.யில் முதுநிலை கல்வியில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர இணையம் வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேர இணையம் வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழக இயக்குநா் பொ.மோகனசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. எனவே, இம் மையத்தில் 8 முதுநிலைப் பாடப் பிரிவுகளில் சேர, ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ண்ஹ்ஹழ்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 300 இணையம் வழியாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் உரிய சான்றிதழ்களுடன் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04342-266399 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.