தருமபுரி

சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தரக் கோரிக்கை

DIN

அரூரை அடுத்த கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில் சுடுகாடு வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கடத்தூா் ஒன்றியம், கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியில் பெத்தூா், கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, துறிஞ்சிப்பட்டி, அண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அரூா்-சிந்தல்பாடி நெடுஞ்சாலை ஓரத்தில் குறுகிய இடத்தில் உள்ள சுடுகாட்டில் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனா்.

சுடுகாட்டில் போதிய இடம் இல்லாததால் ஏற்கெனவே அடக்கம் செய்துள்ள இடத்தில் மீண்டும் சடலங்களை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. கோபிசெட்டிப்பாளையம் கிராம ஊராட்சியில் பல்வேறு இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.

எனவே, பாப்பிசெட்டிப்பட்டி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சுடுகாட்டுக்குத் தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT