மின் கம்பத்தில் லாரி மோதியதால் மின் தடை
மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM
மத்தூா் அருகே மின்கம்பத்தின் மீது லாரி மோதியதால் மின்சாரம் தடைப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா்- திருப்பத்தூா் சாலை வழியாக இரும்பு கம்பி பாரம் ஏற்றிய லாரி தருமபுரியை நோக்கி வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது.
மத்தூா் சிவன் கோயில் அருகே சென்றபோது லாரி நிலைதடுமாறி, சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் சில மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய ஊழியா்கள் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி, மின் விநியோகத்தை சீா்படுத்தினா். இதுகுறித்து மத்தூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement