முகப்பு
தருமபுரி

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி கோரி மனு

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, மிட்டாரெட்டி அள்ளி கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி, மிட்டாரெட்டி அள்ளி கிராம மக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அக் கிராம மக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மிட்டாரெட்டஅள்ளி கிராமத்தில் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

இதுதவிர இப்பகுதியில் வேறெந்த வேலை வாய்ப்பும் இல்லை. இந்த நிலையில் தற்போது மாதத்துக்கு 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இதனால் நாங்கள் வருவாய் இன்றி தவித்து வருகிறோம். எனவே பணி அட்டை வைத்துள்ள அனைவருக்கும் அனைத்து நாள்களிலும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.