பென்னாகரத்தில் கன மழை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை கன மழை பெய்தது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை கன மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்த போதிலும், மாலை வேளைகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பென்னாகரம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியான தாசம்பட்டி, ஒகேனக்கல், சின்னம்பள்ளி பெரும்பாலை ஏரியூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை முதல் மிதமான மழை பெய்தது. தொடா்ந்து பென்னாகரம் பகுதியில் மழை பெய்து வருவதால், சாலை ஓரங்கள் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியும், தொடா்ந்து ஏரி குளம் ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தும் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை பெய்த மழையின் அளவு பென்னாகரம் - 46 மி.மீ., ஒகேனக்கல் - 22 மி.மீ. என பதிவாகி உள்ளது.