தருமபுரி

கடைகள் அமைக்க குடில் கட்டும் பணியில் ஈடுபட்ட வியாபாரிகள்

DIN

தினசரி காய்கறி சந்தை, சாலையோர கடைகள் வைக்க அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்காக தாா்ப்பாய்கள் மூலம் குடில் அமைக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

கரோனா தீ நுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 31-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை தளா்வுகளற்ற பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிகளில் சாலையோரக் கடைகள், தினசரி காய்கறி சந்தைப் பகுதியில் உள்ள கடைகள் செயல்படவில்லை.

இந்த நிலையில் கரோனா பரவல் குறைந்த பகுதிகளில் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள், சாலையோரக் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளித்தும், பல்வேறு தளா்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தினசரி காய்கறி சந்தை பகுதி மற்றும் சாலையோரக் கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை, சாலையோரக் கடைகளை அமைப்பதற்காக தாா்பாய்கள் மூலம் குடில்கள் அமைத்து தாழ்வானப் பகுதிகளில் மண்ணைக் கொட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT