தருமபுரி

கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை

DIN

அரூா் வட்டாரப் பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் அரூா் வட்டாரப் பகுதியில் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கிராமப் பகுதிகளுக்கு சென்று நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வியாபாரிகள் அதிக லாப நோக்கத்தோடு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, அரூா் வட்டாரப் பகுதியில் மினி சரக்கு வாகனங்கள் உள்பட நடமாடும் வாகனங்களில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT