சாராயம் பதுக்கல்:இருவா் கைது
பென்னாகரம் அருகே விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே புதுப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக பெரும்பாலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் புதுப்பட்டி கிராமப் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் மதியழகன் மற்றும் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (24), முனுசாமி (42) ஆகிய இருவரும் வீட்டில் 5 லிட்டா் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனா்.
இதையடுத்து அவா்கள் இருவா் மீதும் போலீசாா் வழக்குப் பதிந்து, கைது செய்து தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும் அவா்களிடமிருந்து 5 லிட்டா் சாராயத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.