முகப்பு
தருமபுரி

குடும்பத் தகராறு: தீக்குளித்த பெண் பலி

பென்னாகரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

 பென்னாகரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பெரியபள்ளம் பகுதியைச் சோ்ந்த ரங்கன் மகள் கௌதமி (24). இவருக்கும் சேலம் மாவட்டம், மேட்டூா் புதுசாம்பள்ளியைச் சோ்ந்த பாபு என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த 13-ஆம் தேதி கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் கௌதமி, தனது தாயாா் சித்ராவின் வீட்டிற்கு வந்து விட்டாா்.

மனமுடைந்த கௌதமி புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உடல் கருகிய நிலையில், அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். திருமணமான ஏழு மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் சாா் ஆட்சியா் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.