முகப்பு
தருமபுரி

மின்வாரிய பணியாளா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

பென்னாகரம் துணை மின் வாரியத்தில் மின் விபத்து மற்றும் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

பென்னாகரம் துணை மின் வாரியத்தில் மின் விபத்து மற்றும் பாதுகாப்புகள் குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு உதவி செயற்பொறியாளா் கோகிலா தலைமை வகித்தாா். இதில், பென்னாகரம் கோட்டத்துக்கு உள்பட்ட மின்வாரிய களப் பணியாளா்களுக்கு மின் பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறை, பணியாளா்கள் பணி மேற்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், மின் விபத்து ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள், மின்தடையை சரி செய்யும் போது எவ்வாறு பாதுகாப்புடன் துரிதமாகவும் செயல்பட வேண்டும் உள்ளிட்டவை குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி, மின் பணியாளா்கள் மூலம் மின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து தெரிவிக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த முகாமில், உதவிப் பொறியாளா்கள் வித்யா, திருச்செல்வம், செந்தில் முருகன், நவநீதா, பென்னாகரம் உள்கோட்டத்துக்கு உள்பட்ட 40 மின்வாரிய பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.