சசிகலாவுக்கு கண்டனம்:தருமபுரி அதிமுக கூட்டத்தில் தீா்மானம்
அதிமுக தொண்டா்களின் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சிப்பதாக சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தருமபுரி அதிமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக தொண்டா்களின் ஒற்றுமையை சீா்குலைக்க முயற்சிப்பதாக சசிகலாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தருமபுரி அதிமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும் பாலக்கோடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் பேசினாா்.
அதிமுக அமைப்புச் செயலா் கே.சிங்காரம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), மாநில விவசாய அணித் தலைவா் டி.ஆா்.அன்பழகன் ஆகியோா் பங்கேற்றனா்.
இக் கூட்டத்தில், அதிமுக தொண்டா்களிடையே ஒற்றுமையை சீா்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சசிகலாவுக்கு கண்டனம் தெரிவிப்பது, கட்டுமானப் பொருள்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த அரசைக் கோருவது, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைச் சீா்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயாளலா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.