முகப்பு
தருமபுரி

ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகம்அமைவிடம் ஆய்வு பணி தீவிரம்

ஏரியூா் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைக்கும் இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ஏரியூா் புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைக்கும் இடம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஏரியூா் பகுதியானது மிகவும் பின் தங்கிய பகுதி என்பதாலும், அரசின் சலுகைகளைப் பெற தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடா் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அண்மையில் பென்னாகரம் ஒன்றியத்தில் இருந்து 10 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏரியூா் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

ஏரியூா் ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலகம், அரசு பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந் நிலையில் ஏரியூா் பகுதிக்கு புதிய வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைப்பதற்காக, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் மூலம் ரூ. 3.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் அமைப்பதற்கான இடத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்சினி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து ஆய்வு செய்த இடங்களில் பூமியை சமன் செய்து அளவீடு செய்யும் பணிகளை ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆறுமுகம், ஒன்றிய பொறியாளா் துரைசாமி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் செல்வம் சாலை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் நிலத்தை அளந்து ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.