நிவாரணம் கோரி கூத்து கலைஞா்கள் மனு
கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூத்து கலைஞா்கள் மனு அளித்தனா்.
கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூத்து கலைஞா்கள் மனு அளித்தனா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூத்து கலைஞா்கள் நலச்சங்க கூட்டமைப்பு சாா்பில் அதன் நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு:
தருமபுரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞா்கள் சங்கம் உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா். கோயில் திருவிழாக்கள், முக்கிய பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் நாடகங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தாக்கத்தால் பொதுமுடக்கம் தொடா்ந்து அமலில் உள்ளதால் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்த இயலாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு நிவாரண நிதி வழங்க தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.