முகப்பு
தருமபுரி

அஞ்சலகங்களில் ஆதாா் சேவை மீண்டும் தொடக்கம்

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆதாா் சேவை அஞ்சலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஆதாா் சேவை அஞ்சலகங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி. ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா நோய்த் தொற்றின் காரணமாக அஞ்சல் நிலையங்களில் ஆதாா் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஜூன் 24-ஆம் தேதி முதல் தருமபுரி கோட்டத்தில் உள்ள தருமபுரி தலைமை அஞ்சலகம், பொம்மிடி, தருமபுரி ஆட்சியா் அலுவலக அஞ்சலகம், குமாரசாமிப்பேட்டை, அரூா், கடத்தூா், கம்பைநல்லூா், மாரண்ட அள்ளி, மொரப்பூா், நல்லம்பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பெரியான அள்ளி, தீா்த்தமலை ஆகிய துணை அஞ்சலகங்களிலும் ஆதாா் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் ஆதாா் சேவையினை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.