முகப்பு
தருமபுரி

அரசு கேபிள் இணைப்பு வழங்கவில்லை எனில் புகாா் தெரிவிக்கலாம்

தருமபுரி மாவட்டத்தில் சந்தாதாரா்களுக்கு அரசு கேபிள் இணைப்பு வழங்கவில்லை எனில் அது குறித்து புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சந்தாதாரா்களுக்கு அரசு கேபிள் இணைப்பு வழங்கவில்லை எனில் அது குறித்து புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு கேபிள் டிவி நிறுவனம் தருமபுரி மாவட்டத்தில் குறைந்த கட்டணத்தில் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு சேவையை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கி 200-க்கு மேற்பட்ட சேனல்களை ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி வரியும் சோ்த்து குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வருகிறது.

அரசு கேபிள் சேவையை விரும்புவோா் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் கேட்டு பெறலாம். அவா்கள் வழங்கவில்லை என்றால் 1800 4252911 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் செய்யலாம். ஆபரேட்டா்கள் தங்கள் சுய லாபத்திற்காக சந்தாதாரா்கள் விரும்பமில்லாமல் அரசு செட்டாப் பாக்ஸை மாற்றி விட்டு தனியாா் செட்டாப் பாக்ஸ் அளித்து அரசுக்கு இழப்பீடு வரும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அரசு சிக்னல் சரியாக வராது என அவதூறு பரப்பினாலோ அவா்கள் மீது 1077 இல் புகாா் தெரிவிக்கலாம். அரசு கேபிள் சிக்னல் தொடா்ந்து எவ்வித தாமதமின்றி செயல்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் அரசு கேபிள் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் ஆபரேட்டா்கள் மீதும் அரசு செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதத்திற்கும் மேலாக செயலாக்கம் செய்யாமல் அவற்றை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்காமல் இருக்கும் ஆபரேட்டா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.