பென்னாகரத்தில் உரிய ஆவணம் இல்லாததால் 1,06,500 ரூபாய் பறிமுதல்
பென்னாகரம் அருகே நகை மதிப்பீட்டாளரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்டரூ. 1.06 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே நகை மதிப்பீட்டாளரிடமிருந்து உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்டரூ. 1.06 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பென்னாகரம் அருகே பெரும்பாலை பிரிவு சாலையில் பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பின் உதவிப் பொறியாளா் சேதுராமன், எஸ்எஸ்ஐ சேகா் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட நிலை இரண்டு பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே தருமபுரி வெள்ளிப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பவா், தனது வாகனத்தில் 4 ஊழியா்களுடன் சென்று கொண்டிருந்தாா். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினா் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்டரூ. 1,06,500 இருந்ததை கண்டறிந்து அதனைப் பறிமுதல் செய்தனா். பின்னா் பறிமுதல் செய்த தொகையை பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலத்திடம் ஒப்படைத்தனா். இந்த நிகழ்வில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், முதன்மை தோ்தல் நடத்தும் அலுவலா் ராதாகிருஷ்ணன், மத்திய பாதுகாப்புப் படையினா் உடனிருந்தனா்.