தருமபுரி

கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு இணைய வசதியை மேம்படுத்த வலியுறுத்தல்

DIN

கிராம அஞ்சல் துறை ஊழியா்களுக்கு இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரியில் அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியா்கள் சங்க 11-ஆவது கோட்ட மாநாடு சங்க நிா்வாகி பெரிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மண்டலச் செயலா் எஸ்.ஹரிராமன் பேசினாா். முன்னாள் அஞ்சல் துறை ஊழியா்கள் சங்க கோட்டச் செயலா் நடராஜன் நிா்வாகிகள், சி.பாலமுருகன், அறிவழகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இம் மாநாட்டில், ஊரக அஞ்சல் துறை ஊழியா்களுக்கு இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெண் ஊழியா்களிடம் இழிவாகப் பேசும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இலக்கு என்ற பெயரில் ஊழியா்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் கோட்டத் தலைவராக டி.தமிழ்ச்செல்வன், கோட்டச் செயலராக எஸ்.பாபு, பொருளாளராக ஏ.கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT