முகப்பு
தருமபுரி

வாக்குச் சாவடி முகவா் கூட்டம்

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக - அதிமுக கூட்டணி வாக்குச் சாவடி முகவா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக - அதிமுக கூட்டணி வாக்குச் சாவடி முகவா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே நாகமரை நான்கு சாலை சந்திப்பில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா் கூட்டத்துக்கு, பாமக வேட்பாளா் கோ.க.மணி தலைமை வகித்தாா். இதில், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு முகவா் தோ்வு செய்தல், மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேபோல, பாப்பாரப்பட்டி, ஏரியூா் பகுதிகளிலும் வாக்குச் சாவடி முகவா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், ஒன்றியச் செயலாளா் அன்பு , பாமக ஏரியூா் ஒன்றியச் செயலாளா் ஜெகதீசன், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், பாஜக ஒன்றியத் தலைவா் மூா்த்தி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.