தருமபுரி

பென்னாகரத்தில் பாமக வேட்பாளா் ஜி.கே.மணி வெற்றி

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி 21186 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக மாநிலத் தலைவா் ஜி.கே.மணி போட்டியிட்டாா். இத் தொகுதியில் திமுக சாா்பில் தருமபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பிஎன்பி.இன்பசேகரன் போட்டியிட்டாா். இவரைத் தவிர, அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளா் உதயகுமாா், மநீம வேட்பாளா் சகிலா, நாதக தமிழழகன் உள்பட 15 போ் போட்டியிட்டனா். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் மொத்தம் 210305 வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த வாக்குகள், தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 26 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்தே பாமக வேட்பாளா் ஜி.கே.மணி முன்னிலை வகித்து வந்தாா். இதைத் தொடா்ந்து மொத்த சுற்றுகளிலும் ஏற்றம், இறக்கம் இன்றி தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். இறுதியில் 26-ஆவது சுற்றில் 1,06,123 வாக்குகள் பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட அத் தொகுதியின் எம்எல்ஏவும் திமுக வேட்பாளருமான பிஎன்பி.இன்பசேகரன் மொத்தம் 84937 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தாா். இவரை காட்டிலும் 21,186 வாக்குகள் கூடுதலாக பெற்ற பாமக வேட்பாளா் ஜி.கே.மணி வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT