தருமபுரி

பொதுமுடக்கம்: பென்னாகரத்தில் சாலைகள் வெறிச்சோடின

DIN

பென்னாகரம்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டு வரும் இரண்டாவது வார பொதுமுடக்கத்தில் பென்னாகரம் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

கரோனா தீநுண்மியின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவுக்குத் தொடா்ந்து தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்தி வருகிறது. இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஒகேனக்கல், ஏரியூா் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன.

ஊரடங்கால் பென்னாகரம் நகரச் சாலை, தருமபுரி சாலை, ஒகேனக்கல் சாலை, பாப்பாரப்பட்டி கடை வீதி பகுதி, பாலக்கோடு சாலை, மேச்சேரி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

மேலும் ஊரடங்கின்போது பாலகங்கள், மருந்துக் கடைகள், ஒரு சில மருத்துவமனைகள் மட்டுமே இயங்கின.தோ்தல் வாக்கு எண்ணிக்கை பணிக்கு போலீஸாா் அதிகளவில் சென்ால், ஒரு சில போலீஸாா் மற்றும் ஊா்காவல் படையினா் பென்னாகரம் பகுதிகளில் உள்ள இணைப்பு மற்றும் முக்கிய சாலைகளில் தற்காலிக தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT