தருமபுரி

கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியா் ஆய்வு

DIN

தருமபுரியில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள், மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் குறித்த விவரங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட ச.திவ்யதா்சினி பொறுப்பேற்றவுடன், ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அங்கு தொலைபேசியில் தொடா்புகொள்வோருக்கு அளிக்கப்படும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், துணை இயக்குநா் (சுகாதாரம்) பூ.இரா.ஜெமினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT