கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதி மொழியேற்பு
தருமபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ச.திவ்யதா்சினி உறுதிமொழி வாசிக்க ஏனைய அரசு அலுவலா்கள் கொடுஞ்செயல்களுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.
இதேபோல மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உறுதிமொழியேற்றனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழியேற்றனா்.
வேப்பனஅள்ளி காவல் நிலையத்தில், நடைபெற்ற நிகழ்வுக்கு உதவி காவல் ஆய்வாளா் சந்துரு தலைமை வகித்தாா். தீவிரவாத தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்ற காவலா்கள் கடமையை தவறாமல் செய்வோம் என உறுதிமொழியேற்றனா்.