முகப்பு
தருமபுரி

நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்

பென்னாகரத்தில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

பென்னாகரத்தில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஹோமியோபதி மருத்துவா் பாலாஜி தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.க.மணி கலந்துகொண்டு, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில் ஆா்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரைகளை 30-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு வழங்கி, மாத்திரைகளை உட்கொள்ளும் முறை குறித்து விளக்கமளித்தாா். மேலும் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் செல்வகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் கவிதா ராமகிருஷ்ணன், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.