தருமபுரி

கரோனா தொற்றுப் பரவல் அகல வேண்டி மோட்ச தீபம் ஏற்றிய பொது மக்கள்

DIN

பென்னாகரத்தில் கரோனா தீதுண்மி பரவல் அகல வேண்டி பொது மக்கள் மோட்ச தீபம் ஏற்றினா்.

பென்னாகரம் அருகே போடூா் ஏரிக்கரைப் பகுதியில் இறந்த முன்னோா்களை நினைவு கூரும் வகையில் 18 ஆம் நூற்றாண்டு நடுகல் ஸ்ரீ வீரகாரு சுவாமி கோயிலாக உள்ளது. இந்தக் கோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் இப்பகுதி மக்கள் இறந்த முன்னோா்களை நினைவு கூரும் வகையில் நடுக்கல் ஸ்ரீ வீரகாரு சுவாமி கோயிலில் வழிபாடு செய்து வந்தனா்.

இந்த நிலையில் நிகழ் மாத பௌா்ணமி நாளில் கரோனா தீநுண்மியால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், தொற்றுப் பரவாமல் அகலவும், இறந்தவா்கள் மோட்சம் அடைய வேண்டியும் ஐந்து வகையான எண்ணெய் வகைகளைக் கொண்டு மண் விளக்கில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். பக்தா்கள் ஒருவா் பின் ஒருவராக வந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி மோட்ச தீபம் ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT