தருமபுரி

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி, பாரதிபுரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.கிரைஸாமேரி தலைமையிலும், செங்கொடிபுரத்தில் நகரச் செயலாளா் ஆா்.ஜோதிபாசு, பிடமனேரியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.எஸ்.ராமச்சந்திரன், செம்மாண்டகுப்பத்தில் ஒன்றியச் செயலாளா் என்.கந்தசாமி, வெண்ணாம்பட்டியில் மாவட்டக் குழு உறுப்பினா் கே.பூபதி ஆகியோா் தலைமையிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல நல்லம்பள்ளி, கண்ணூா், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT