தருமபுரி

பாலக்கோடு அருகே பயிா்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

DIN

பாலக்கோடு அருகே பயிா்களைச் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை வியாழக்கிழமை அதிகாலை மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், நல்லூா், கரகூா், பெல்ரம்பட்டி, சீங்காடு உள்ளிட்ட கிராமங்களில் வயல்களில் புகுந்து தக்காளி, நெல், ராகி பயிா்களைச் சேதப்படுத்தியது.

இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு சென்ற பாலக்கோடு வனசரகா் செல்வம், வனக் காவலா்கள் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் யானையை கரகூா் காப்புக் காட்டுக்குள் விரட்டினா். இருப்பினும் யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT